search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்ல முயற்சி"

    • ராஜா (44). டெய்லர். இவரும் வில்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி, கோவிந்தன் என்ப வரும் மது அருந்துவதற்காக பில்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர்.
    • அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ராஜா (44). டெய்லர். இவரும் வில்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி, கோவிந்தன் என்ப வரும் மது அருந்துவதற்காக பில்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர்.

    அப்போது ராஜாவுக்கும், கோவிந்தனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.

    இதில், ராஜாவுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மீட்ட அக்கம் பகத்தினர் ஆம்பு லன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ராஜாவை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இதுகுறித்து பரமத்தி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத் தனர்.

    • சிங்கம்புணரி அருகே கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொல்ல முயன்றார்.
    • நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சேவுகப்பெ ருமாள்(வயது35). இவரது மனைவி ராணி(30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமை யாகிய சேவுகப்பெருமாள், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி வந்துள்ளார்.

    நேற்றுமுன்தினமும் சேவுகப்பெருமாள் மது குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் ராணியை தாக்கி உள்ளார். பின்னர் அவர் போதையில் தூங்கிவிட்டார்.

    இந்தநிலையில் கணவர்மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துவந்த ராணி, தூங்கிக்கொண்டிருந்த சேவுகப்பெருமாள் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    அவரை உறவினர்கள் மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கொலை செய்ய முயன்ற ராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர்.
    • மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரது தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டினார்கள்.


    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.

    கடந்த 15 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 

    • தொட்டியம் அருகே ரேஷன் கடை மூட்டை தூக்கும் தொழிலாளியை கொல்ல முயற்சித்த 2 ேபரை போலீசார் தேடி வருகின்றனர்
    • இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் கூத் தன் செட்டியார் தெரு பகுதி–யைச் சேர்ந்தவர் ராமன் (வயது 50). இவர் கொடி–யம்பா–ளையம் ரேஷன் கடையில் மூட்டை தூக்கும் தினக்கூலி தொழி–லாளி–யாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வழக் கம்போல் நேற்று மாலை வேலை முடிந்து ராமன் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற் றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி சென்றனர்.

    இதில் அவரது கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரத்த வெள்ளத்தில் அவர் ஆற் றங்கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந் தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி சம்பூர்ணம் கணவரை மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை முயற்சிக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மயக்க நிலையில் இருப்ப–தால் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்த முடிய–வில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. ஆற்றில் குளிக்கும் போது தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்ப–டுத்தியுள்ளது.

    • 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
    • இவர்களை அந்த 5 பேர் கும்பல் காரில் பின் தொடர்ந்து வந்ததுடன், மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்

    கோவை,

    கோவை செட்டி பாளையம் அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாக ரன்(வயது39).

    இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனியில் லேத் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாசம் ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    பின்னர் 3 பேரும் அங்கிருந்து வெளியில் வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த 5 பேர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் பிரபாகரன் தனது நண்பர்களுடன் அங்கிருந்து மொபட்டில் சென்றார்.

    இந்த நிலையில் இவர்களை அந்த 5 பேர் கும்பல் காரில் பின் தொடர்ந்து வந்ததுடன், மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அந்த 5 பேர் கும்பல் வண்டியில் இருந்து பிரபாகரனை கீழே தள்ளி தென்னை மட்டையால் தாக்கினர். பின்னர் அங்கு இருந்த கல்லால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அவரது நண்பர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரபாகரனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து செட்டிபாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    • மதுரை அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள சிக்கந்தர் சாவடி, சுசி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு மகன் உத்தமராஜா உள்ளார்.

    கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்க்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.சம்பவத்தன்று நள்ளிரவு இவர் கூடல்நகர் மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்போது இரும்புக்கடை அருகே 3 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கும்பல் உத்தமராஜாவை கத்தியால் குத்தி விட்டு தப்பியது.படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தாயார் பாண்டியம்மாள், கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தமராஜாவை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சிந்தாமணி, கல்லுடையான் கோவில் தெரு சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (23), சிக்கந்தர் சாவடி, மந்தை அம்மன் கோவில் தெரு ராஜா (40), கோவில்பாப்பாகுடி, மதர் தெரசா ரோடு தினேஷ் குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    • மகாமுனி பக்கத்து விட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் சென்று குடிக்க பணம் கேட்டார்.
    • கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    கோவை:

    கோவை பாப்பம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு மணி என்கிற மகாமுனி (43) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மகாமுனிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி லட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல மகாமுனி, லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தரவில்லை.

    இதனால் மகாமுனி பக்கத்து விட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் சென்று குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவரும் பணம் தர மறுத்து விட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்தநிலையில் மகாமுனி பக்கத்து வீட்டுகாரரிடம் பணம் கேட்டது லட்சுமிக்கு தெரியவந்தது.

    இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மகாமுனி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து லட்சுமியின் கழுத்தில் வெட்டினார்.

    பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சுறுண்டு விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தின் ஓடி வந்தனர்.

    அங்கு லட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மகாமுனியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மதுரை அருகே தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் எதிரே, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதாக ராஜகம்பீரம் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கத்திற்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

    அதன் பிறகு படுகாயம் அடைந்தவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் படுகாயம் அடைந்தவர், பொள்ளாச்சியை சேர்ந்த பழனி (வயது 45) என்பது தெரியவந்தது. இவர் மதுரை ஒத்தக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு கஞ்சா, மது பழக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பழனியுடன் சுற்றித் திரிந்ததாக, வாலிபர் ஒருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சதீஷ்குமார் கூறுகையில், "நான் மதுபானம் வாங்குவதற்காக பழனியிடம் பணம் கேட்டேன். அவர் தர மறுத்தார். எனவே ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டு தப்பி சென்று விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பழனியை கொல்ல முயன்றதாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    ×